தமிழகம்

கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Summary:

கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருந்த நிலையில், கேரளாவில் திடீரென கனமழை கொட்டியது. இதனால் இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை பாதிப்புகள் காரணமாக  40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கேரளாவின் பல மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால், அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement