19 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொட்டித்தீர்த்த கனமழை.! வெள்ளக்காடாக மிதக்கும் டெல்லி.!

19 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொட்டித்தீர்த்த கனமழை.! வெள்ளக்காடாக மிதக்கும் டெல்லி.!



heavy-rain-in-delhi

டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 112.1 மி.மீ. கனமழை பெய்துள்ளது. 

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது. அங்கு பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று காலை முதலே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13ம் தேதி 126.8 மிமீ அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக முனிர்கா, சப்தர்ஜங், மயூர் விஹார் , நேரு பிளேஸ், கரோல் பாக் என நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. மேலும், வரும் 4ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.