வெளுத்து வாங்கும் கனமழை, பயங்கர நிலச்சரிவு! அதிகரித்து வரும் பலியானவர்களின் எண்ணிக்கை!!

வெளுத்து வாங்கும் கனமழை, பயங்கர நிலச்சரிவு! அதிகரித்து வரும் பலியானவர்களின் எண்ணிக்கை!!



heavy-rain-and-landslide-in-maharasthra

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், நேற்று மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணப்புப் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக  சாலைகள் நீரில் மூழ்கின. ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

maharasthra

ரத்னகிரி மாவட்டத்திலும் பெய்த தொடர் மழையால், வஷிஸ்டி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும், 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.