இந்தியா

உயிரோடு இருக்கும் போதே தனது உடலை தானே அடக்கம் செய்த நபர்? அதிர்ச்சி வீடியோவின் சோகப் பின்னணி.

Summary:

he man dug up a well and tried to bury himself

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபாகர் ரெட்டி என்பவர் உயிரோடு தன்னை தானே குழியில் அடக்கம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

விவசாயியான இவருக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும், கடந்த 2001 ஆம் ஆண்டு இவர்கள் அனைவர்க்கும் தலா 15 ஏக்கர் நிலம் பங்கு பிரித்து தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் பிரபாகரின் தம்பி ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இதுவரை விவசாயம் செய்துவிட்டு, தற்போது இடம் சரியில்லை என தன்னிடம் பிரச்சனை செய்வதாகவும், தன்னிடம் அந்த இடத்திற்கான பட்டா இருத்தும் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை தொந்தரவு செய்வதாகவும் புகார் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து ஏற்கனவே தாசில்தாரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. உள்ளூர் MLA வுடன் சேர்ந்து எனது தம்பி ஆடுகிறான். இதனால் எனக்கு ஒரு நியாயம் வேண்டும் என கூறி இந்த அதிர்ச்சி செயலில் இறங்கியுள்ளார்.

பிரபாகரின் இந்த அதிர்ச்சி செயல் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்னனர். 


Advertisement