இந்தியா

திடீரென வீட்டில் இருந்து காணாமல் போன மனைவி.! உண்மை தெரிந்ததும் தூக்கில் தொங்கிய கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Haryana man commit suicide wife married someone

வீட்டில் இருந்து காணாமல்போன மனைவி வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டதை அறிந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதாகும் ஜக்தேவ். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து இருவரும் தனியாக வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜக்தேவ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் அவரது மனைவியை காணவில்லை.

எங்கு தேடியும் அவரைப்பற்றி தகவல் கிடைக்காததால் ஜக்தேவ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி தனது காதலரை திருமணம் செய்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து ஆர்த்தி நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவல் ஜக்தேவ்விற்கு தெரியவர, அவமானம் தாங்க முடியாமல் ஜக்தேவ் நேற்று முன் தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை ஜக்தேவின் உறவினர் ஒருவர் ஜக்தேவின் வீடிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement