முஸ்லீம் நண்பனின் மீது திருட்டுப்பட்டம் கட்டி, அடித்தே கொலை செய்த நட்புகள்... கொடூரத்தின் உச்சம்..!

முஸ்லீம் நண்பனின் மீது திருட்டுப்பட்டம் கட்டி, அடித்தே கொலை செய்த நட்புகள்... கொடூரத்தின் உச்சம்..!


haryana-22-aged-muslim-youngster-murder-by-hindu-friend

நண்பனின் மீது திருட்டுப்பட்டம் கட்டிய நண்பர்கள், அவரை அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வால் பகுதியை சார்ந்த 22 வயது முஸ்லீம் இளைஞர், தனது நண்பர்களின் அலைபேசியை திருடியதாக 3 பேரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆனால், முஸ்லீம் இளைஞரின் குடும்பத்தினர் இது மத வெறுப்பு கொலை என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகின. கொலைக்குற்றம் தொடர்பாக பல்வால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மரணம் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோவின் பேரில் ஆகாஷ், விஷால் மற்றும் கலுவா என்ற 3 இளைஞர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுகுறித்து காவல் அதிகாரி சந்த் ஹட் தெரிவிக்கையில், "கடந்த டிச. 15 ஆம் தேதி ராகுல் கான் என்ற நபர் விபத்தில் இறந்ததாக தகவல் கிடைத்தது. விசாரணை மேற்கொண்டு ராகுல் கானின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், பிரேத பரிசோதனையில் ராகுலின் உடலில் அடித்து கொலை செய்யப்பட்ட காயம் இருந்தது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கவே, புகாரின் பேரில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஆகாஷ் தன்னை குற்றமற்றவராக நிரூபணம் செய்ய வீடியோ எடுத்ததாக விசாரணையில் கூறிய நிலையில், அவர் தனது நண்பனை அடிக்க வேண்டாம் என வீடியோவின் பின்னணியில் குரல் எழுப்பியதும் பதிவானது. 

haryana

கூலி தொழிலாளியான ராகுல் கானுக்கு சாய்னா என்ற மனைவி இருக்கிறார். ராகுல் கான் கடந்த டிச. 14 ஆம் தேதி தனது நண்பர்களுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அங்குள்ள நாங்கள் ரோடு சாலை பகுதியில் விபத்து ஏற்பட்டு ராகுல் காயம் அடைந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் அவரின் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் நாங்கள் இந்துக்கள், நீ முஸ்லீம் என பேசியவாறு தாக்கியதும் வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் ராகுலின் 3 நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராகுல் கானின் தந்தை ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், வேலைவெட்டிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ராகுல் சுற்றி வந்துள்ளார். அவரது நண்பர்கள் ராகுல் கானிடம் செலவுக்கு பணம் கேட்ட நிலையில், அவர் ரூ.2000 கொடுத்துள்ளார். ஆனால், நண்பர்கள் தரப்பில் ரூ.5000 கேட்கப்பட்டுள்ளது என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ராகுல் கான் திருட வாய்ப்பில்லை. இது வகுப்புவாத மோதலே என ராகுல் கானின் தந்தை தெரிவித்துள்ளார்.