இந்தியா

நடு காட்டில் இருந்த கை பம்பு..! தண்ணீர் கை பம்பு என நினைத்த காவல்துறையினர் தந்திரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்..! பம்பின் கீழ் குழி தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Hand drums of illicit liquor had been fitted on the bottom

நடுக்காட்டில் இருந்த அடிபம்பு ஒன்றை சோதனை செய்த அதிகாரிகளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் குடிநீருக்காக போடப்பட்ட அடிபம்பு போல் இருந்த அதில் இருந்து சாராயம் வந்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் இருந்து எரிசாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனைக்காக அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சுற்றுமுற்றும் பார்த்தும் எந்த இடத்திலும் எரிசாராயத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.

சிறிதுநேரம் அங்கு சோதனை செய்த அதிகாரிகள் அந்த இடத்தில் அடிபம்பு ஒன்று இருப்பதை பார்த்தனர். குடிநீருக்காக போடப்பட்ட அடிபம்பு என நினைத்த அவர்கள் அதில் இருந்து தண்ணீர் குடிக்க முயன்றபோது அடிபம்பில் இருந்து சாராயம் வந்துள்ளது.

இதனை அடுத்து நடந்த சோதனையில் பூமிக்கு அடியில் சாராயத்தை மறைத்துவைத்து பூமிக்கு மேலே அடிபம்பை வைத்து வெளியே கொண்டுவந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட்டவைத்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த இரண்டு பெண்களை கைதுசெய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement