இந்தியா

வயசு 62 ஆச்சு.. கோடி கணக்கில் சம்பாதிக்கும் பாட்டி.. அப்படி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.?

Summary:

பால் வியாபாரம் செய்து 1 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ள பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

பால் வியாபாரம் செய்து 1 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ள பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாகனா கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பாட்டி நவல்பென். பால்பண்ணை ஒன்றை நடத்திவரும் இந்த பட்டி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1.10 கோடி ரூபாய் அளவிற்கு பால் வியாபாரம் செய்துள்ளார். இதன் மூலம் மாதம் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் லாபம் ஈட்டிவருகிறாராம் இந்த 62 வயதாகும் பாட்டி.

இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு கோடியை தாண்டியுள்ளார். மேலும் அதிக அளவிலான பாலை விற்பனை செய்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பனஸ்கந்தா மாவட்டத்தில் முதல் இடத்தில் உள்ளார் இந்த பாட்டி.

சுமார் 80-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மட்டும் 45 பசு மாடுகளை வைத்து அவைகளிலிருந்து வரும் பாலை கறந்து பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்த அளவிற்கு வருமானம் ஈட்டிவருகிறார் இந்த பாட்டி. மேலும்  பாட்டியின் பால் விற்பனை பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டு லட்சுமி விருதுகள் மற்றும் மூன்று சிறந்த பசுபாலக் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement