இந்தியா Covid-19

பிஞ்சு குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்.! கண்கலங்க வைக்கும் காட்சிகள்.!

Summary:

Group of people walking to home town with kids

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ள நிலையில், வேலை இழந்த கூலி தொழிலார்கள் தங்கள் பிஞ்சு குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாட சம்பளத்தை நம்பி வேலை பார்த்த பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து நிவாரண நிதியும் பெற முடியாத சூழலில் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்துள்ள வெளிமாநில தொழிலார்கள், பேருந்து வசதி நிறுத்தப்பட்டதால் தங்கள் குழந்தைகளையும், உடமைகளையும் தூக்கிக்கொண்டு பல கிலோமிட்டர் தூரத்தை நடந்தே சென்று சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

குழந்தைகள், உறவினர்கள், உடைமைகளுடன் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.


Advertisement