தாலி கட்டும் முன் மாப்பிளை செய்த நெகிழ்ச்சி காரியம்! பூரித்து போன பெண் வீட்டார்.!

தாலி கட்டும் முன் மாப்பிளை செய்த நெகிழ்ச்சி காரியம்! பூரித்து போன பெண் வீட்டார்.!



Groom said no dowry in rajasthan marriage

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஜிதேந்திர சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சல் செகாவத் என்ற பெண்ணுக்கும் பெறோர்கள் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர்.

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை இவர்களது திருமணம் சிறப்பாக தொடங்கியது. திருமணத்தின் ஒருபகுதியாக மணமகளின் தந்தை மணமகன் கையில் 11 லட்சம் ரூபாயை வரதட்சணையாகக் கொடுத்தார். ஆனால், மணமகன் அந்த பணத்தை ஏற்க மறுப்பு தெரிவித்தார்.

Mystery

ஐய்யோ! திருமண ஏற்பாட்டில் ஏதேனும் குறைவைத்துவிடமோ? அதனால்தான் மாப்பிளை வரதட்சணையை வாங்க மறுகிறாரோ என பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெண்ணின் தந்தை மாப்பிளையிடம் கேட்டபோது அவர் கொடுத்த விளக்கம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

வதட்சணை வாங்க கூடாது என்பதுதான் எனது பாலிசி எனவும், 11 லட்சத்திற்கு பதிலாக 11 ரூபாயும், ஒரு தேங்காய் மட்டும் தாருங்கள். அதுவே போதும். உங்கள் மகள் நன்கு படித்துள்ளார். திருமணத்திற்க்கு பிறகு அவர் வேலைக்கு சென்றால் அதுவே மிகப்பெரிய சந்தோசம், இந்த வரதட்ணனையெல்லாம் தேவை இல்லை என கூறி அனைவரைம் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.