இந்தியா

கதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்- காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி ஆயிடுவிங்க!

Summary:

Groom married at gunpoint in patna

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் திருமணத்திற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு வினோத் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டும் வீடியோ ஓன்று வெளியாகி வைரலானது.

அந்த விடியோவை பார்த்த வினோத்தின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வினோத் அந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து வினோத்திடம் போலீசார் விசாரித்ததில் வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமாற்றத்திற்கு வந்ததை அடுத்து துப்பாக்கி முனையில் நடந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அந்த திருமணத்தையும் ரத்து செய்துள்ளது.


Advertisement