பசுமை பட்டாசு என்றால் என்ன தெரியுமா? டெல்லியில் நடந்த கூத்தை பாருங்கள்!

பசுமை பட்டாசு என்றால் என்ன தெரியுமா? டெல்லியில் நடந்த கூத்தை பாருங்கள்!


green crackers in delhi

உச்சநீதிமன்றம் இந்த வருடம் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு பட்டாசு வெடிப்பதை பற்றி பல நிபந்தனைகளை வெளிட்டியிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் அந்த நிபந்தனைகள்:

தீபாவளி தினத்தன்று பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். 

குறைந்த அளவிலான புகை மற்றும் சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் பசுமை  பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 

இதனையடுத்து பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதே பலருக்கு தெரியவில்லை. மேலும் அதனை எங்கு வாங்குவது என்றும் தெரியவில்லை. இந்நிலையில் பசுமை பட்டாசு மட்டும் தான் வெடிக்க வேண்டும் என்றால் மக்கள் என செய்வார்கள் என்று பல கேள்விகள் எழுந்தன.

green crackers in delhi

இந்நிலையில் டெல்லியில் இன்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது பசுமை பட்டாசு என்பதை கேலி செய்யும் விதமாக சதார் பஜார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக பச்சை காய் கறிகளுக்குள் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்தனர். 

இதனை பற்றி கருது தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் சாப்ரா, "பசுமை பட்டாசு என்றால் என என்பதே எங்களுக்கு புரியவில்லை. அதனை பற்றி விளக்கம் கேட்டபொழுது ஒரு நாளில் அனுமதிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் பட்டியலை தருவதாக கூறினார். ஆனால் இதுவரை அதை பற்றி எந்த தகவலும் வரவில்லை. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே இவ்வாறு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.