காதலனுக்கு காதலி அனுப்பிய வீடியோ! கண்டுகொள்ளாமல் இருந்த காதலன்! இறுதியில் நடந்த விபரீதம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

காதலனுக்கு காதலி அனுப்பிய வீடியோ! கண்டுகொள்ளாமல் இருந்த காதலன்! இறுதியில் நடந்த விபரீதம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் ரம்யா. இவர் அங்குள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். ரம்யா, சிவபார்கவ் என்ற வாலிபரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ரம்யா சிபார்கவ்விடம் ஏன் பேச மறுக்கிறாய் என்று கெஞ்சியுள்ளார். மேலும் நண்பர்களை தூதுவிட்டும் பேச வைத்துள்ளார்.

ஒருகட்டத்தில் சிவபார்கவ் பேசாததால், கடும் விரக்தியடைந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வீட்டில் இருக்கும் கொக்கியில், தனது துப்பாட்டாவை மாட்டிய ரம்யா அதை அப்படியே நேரலையில் வீடியோவாக பதிவிடத் துவங்கினார். நேரலையில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ரம்யா.

அறைக்குள் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் ரம்யாவின் பெற்றோர் கதவைத் தட்டிப் பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது துாக்கில் தொங்கிய நிலையில் ரம்யா சடலமாகக் கிடந்தார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வீடியோவும் காதலனுக்கு ரம்யா அனுப்பிய செய்திகளும் இருந்தன. அவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காதலன் சிவ பார்கவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo