உங்கள தனியா பாக்கணும்..! திருமணத்திற்கு முன்பே போன் செய்து அழைத்த இளம் பெண்..! ஆசையாக சென்ற மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
உங்கள தனியா பாக்கணும்..! திருமணத்திற்கு முன்பே போன் செய்து அழைத்த இளம் பெண்..! ஆசையாக சென்ற மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிளையை மணமகள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெட்டதாபட்னா பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு சாலையில் கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனை அடுத்து அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இளைஞருக்கும், பெட்டதபுரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வரும் மார்ச் 13ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகள் தன்னை நேரில் சந்திக்கவேண்டும் என அழைத்தாகவும், நேரில் சென்றபோது சற்றும் எதிர்பாராத நேரத்தில் தன்னை கத்தியால் குத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், கல்லூரி படிப்பை தொடரவேண்டும் எனவும் தனது பெற்றோரிடம் கூறியும் அவர்கள் திருமணத்தை நிறுத்தாததால், தானே திருமணத்தை நிறுத்த முடிவு செய்து மாப்பிளையை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.