இந்தியா

தேயிலை தோட்டத்திலிருந்து வந்த அலறல்சத்தம்! சட்டையில் இரத்தத்துடன் ஓடிய இளைஞர்! வெளியான அதிர்ச்சி பின்னணி

Summary:

girl sexually abuse and killed by youngman

கேரளா வண்டிப்பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயம்மா. 50 வயது நிறைந்த இவர் சமீபத்தில் தனது வீட்டு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் தனது மாட்டை தேடி சென்றுள்ளார். அப்பொழுது  தேயிலைத் தோட்டத்தில் இருந்த ரத்தீஷ் என்பவர் விஜயம்மாவை பாலியல் வன்கொடுமை செய்து,  கத்தியால் அவரது தலையில் பலமுறை வேகமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த விஜயம்மா கதறி அழுதுள்ளார். 

இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகிலிருந்தவர்கள் விஜயம்மா இரத்தவெள்ளத்தில் துடிதுடிப்பதை கண்டு பெருமை அதிர்ச்சியில் மூழ்கினர்.மேலும் அப்பொழுது அங்கே ரத்தம் படிந்த சட்டையுடன் ரத்தீஸ் ஓட்டம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் விஜயம்மா உயிரிழந்தார்.

 இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விஜயம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்போது அருகில் இருந்த ரத்தீஷின் செல்போனை கைப்பற்றி உள்ளனர்.

 பின்னர் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ரத்தீஷை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement