இந்தியா

வீட்டில் தனிமையில் இருப்பதாக அழைத்த காதலி! ஆசையாக சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Girl helped to kill her lover in up

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒருபகுதியில் முன்னா என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தனது வீட்டின் மேல் பகுதியை பங்கஜ் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். முன்னாவின் வீட்டில் வாடகைக்கு இருந்த பங்கஜ் தான் இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இன்டர்நெட் சென்டர் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதனால் முன்னா-பங்கஜ் இருவரிடையே சண்டை ஏற்பட்டதில் வீட்டை காலி செய்யுமாறு முன்னா கூறியுள்ளார். இதனை அடுத்து பங்கஜ் வீட்டை விட்டு காலி செய்து வேறு பகுதிக்கு மாறியுள்ளார். இந்நிலையில் முன்னா வீட்டில் பங்கஜ் வசித்தபோது பங்க்ஜிற்கும் - முன்னாவின் மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட முன்னா எப்படியாவது பன்கஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது மகளின் மனதையும் மாற்றியுள்ளார். இதனை அடுத்து தான் வீட்டில் தனியாக இருப்பதாக பன்கஜிடம் கூறி அவரை வீட்டிற்கு வரவைக்குமாறு முன்னா தனது மகளிடம் கூறியுள்ளார்.

அதன்படி முன்னாவின் மகள் பன்காஜிற்கு போன் செய்து அவரை அழைத்துள்ளார். காதலியின் பேச்சை நம்பி அவர் வீட்டிற்கு பங்கஜ் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் வந்த அவரை முன்னாவின் குடும்பத்தினர் கயிறால் கட்டி அவரை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டனர்.

நீண்ட நாட்களாகியும் தனது சகோதரரை காணவில்லை என பன்கஜின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் முன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து பன்கஜை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததை கண்டுபிடித்து உடலை கைப்பற்றினர்.

இதனை அடுத்து முன்னா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து போலீசார் சிறையில்  அடைத்துள்ளனர்.


Advertisement