இந்தியா

கணவன் இறந்து 2 வருடம் கழித்து கர்ப்பமான பெண்! குழந்தை பிறந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

Summary:

Girl got pregnant after husband dead

நாக்பூரை சேர்ந்தவர் மனிஷா. 32 வயதாகும் மனிஷாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்த மனிஷா கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் தந்தை குறித்து மனிஷா மழுப்பலாக பதிலளித்ததை அடுத்து மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மனிஷாவின் கர்ப்பம் குறித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கணவனை இழந்த மனிஷா வீட்டில் தனிமையில் இருந்தபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவினாஷ்(22) என்ற இளைஞர் மனிஷாவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

விஷயம் அறிந்த மனிஷாவின் மைத்துனர் அவினாஷை அடித்து கண்டித்துள்ளார். ஆனால், இதைப்பற்றி வெளியே சொன்னால் குடும்ப மானம் கெட்டுவிடும் என்பதால் இதுகுறித்து வெளியே சொல்லவில்லை. இந்நிலையில்தான் மனிஷா கற்பமாகியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவினாஷை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement