30 வயதில் 20 வது முறை கர்ப்பம். 16 குழந்தைகள். மருத்துவர்களை அதிரவைத்த பெண்!



Girl got pregnant 20th time at age of 30

மராட்டிய மாநிலத்தின் பீட் என்னும் பகுதியை சேர்ந்தவர் லங்காபாய் காரத். தற்போது 30 வயதாகும் இவர் இப்போது வரை 20 முறை கர்ப்பம் தரித்துள்ளார். 30 வயதில் 20 முறை கர்ப்பம் தரித்த பெண்ணை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இவர் ஒரு குறிப்பிட்ட நாடோடி இனத்தை சேர்ந்தவர் என்றும் பெரும்பாலும் இவரது தொழில் சிறு சிறு வேலைகள் செய்வது என்றும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி இடம்பெயர்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனாலயே இந்த பெண்ணின் பிரசவம் குறித்த தகவல்கள் சுகாதார துறைக்கு தெரியாமலே இருந்துள்ளது. இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் பிறந்துள்னன. அதில் 11 குழந்தைகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளது. மூன்று முறை மூன்றாவது மாதத்தில் கர்ப்பம் கலைந்துள்ளது.

Mystery

இந்நிலையில்தான் 20 வது முறையாக லங்காபாய் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுவரை பிறந்த குழந்தைகள் அனைத்தும் வீட்டிலையே பிறந்ததால் இவர் மருத்துவமனை பக்கமே செல்லவில்லை. இந்தமுறை இந்த தகவல் எப்படியோ மருத்துவர்களுக்கு தெரியவர லங்காபாய்யை அழைத்து மருத்துவர்கள் சோதனை செய்துவருகின்றனர்.