பச்ச உடம்புக்காரினும் பாக்கல..! கணவனின் கண் முன்னே மனைவியை கொடுமையாக தாக்கிய மந்திரவாதி..! துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்..!

பச்ச உடம்புக்காரினும் பாக்கல..! கணவனின் கண் முன்னே மனைவியை கொடுமையாக தாக்கிய மந்திரவாதி..! துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்..!


Girl dies in brutal exorcism near Andhra

பேய் பிடித்திருப்பதாக கூறி இளம் பெண் ஒருவரை மந்திரவாதி அடித்து துன்புறுத்தியதில் அந்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜிதா. 24 வயதாகும் ரஜிதா மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரஜிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Crimeதனது மனைவிக்கு பேய் பிடித்ததாக நினைத்த மல்லேஷ், உள்ளூர் மந்திரவாதி ஷாம் என்பவரை வீட்டிற்கு வரவைத்து தன் மனைவி மீது இருக்கும் பேய்யை ஓட்டுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மந்திரவாதி ஷாம் பேய் ஓட்டுவதாகக் கூறி ரஜிதாவின் தலைமுடியை பிடித்து அவரது கன்னத்தில் அறைந்ததோடு அவரை மேலும் கொடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் ரஜிதாவின் தலை அருகில் இருந்த கட்டிலில் இடித்ததில் ரஜிதா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து ரஜிதாவின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, காவல்துறையினர் மந்திரவாதி ஷாம் மற்றும் ரஜிதாவின் உறவினரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ரஜிதாவின் கணவர் மல்லேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.