புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஒரே வீட்டில், சகோதரர்களை திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்! திடீரென நேர்ந்த மர்மமரணம்! நடந்தது என்ன?
ஹரியானா மாநிலத்தில் வசித்து வந்தவர் பிரேம்சந்த். அவரது மனைவி ரஜ்னி.அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணவரின் குடும்பத்தார்கள் ரஜ்னி தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். பிரேம்சந்தின் சகோதரர் பங்கஜ். இவருக்கு ரஜ்னியின் சகோதரி மம்தாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தனது சகோதரி தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்துவிட்டனர் என மம்தா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், பிரேம்சந்துக்கும், எனது சகோதரி ரஜ்னிக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எனக்கு, பிரேம்சந்தின் சகோதரரான பங்கஜுடன் திருமணம் நடைபெற்றது.
மேலும் பிரேம்சந்தின் குடும்பத்தினர்கள் ரஜ்னியிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். அவரை மட்டுமின்றி என்னையும் பலமுறை துன்புறுத்தினார்கள்.
இந்நிலையில் அவர்களின் கொடுமையை தாங்ககொள்ள முடியாமல் நானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளேன். மேலும் கோபித்துக்கொண்டு சிலநாட்களாக எனது பெற்றோர் வீட்டில்தான் வசித்து வருகிறேன்.
இந்த சமயத்தில் தான் ரஜ்னி உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயங்கள் உள்ளது. இதனால் எனது மாமனார், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள்தான் எனது சகோதரி ரஜ்னியை கொன்றுள்ளனர் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பிரேம்சந்தின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.