இந்தியா

திருமண நாளில் பெற்றோரை தனது வீட்டிற்கு அழைத்த இளம்பெண்..! அங்கு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

Summary:

girl commits hanging suicide in wedding day

புதுடெல்லியில் வசித்து வந்தவர் அங்கித்.  இவரது மனைவி அகன்ஷா இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அகன்ஷா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கித் மற்றும் அகன்ஷாவிற்கு  இரண்டாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது.  ஆனால் அப்போது அங்கித் அகன்ஷாவிற்கு வாழ்த்து கூற வில்லை என கூறப்படுகிறது,. இந்நிலையில் மனவருத்தத்துடன் காணப்பட்ட அகன்ஷா தனது பெற்றோருக்கு போன் செய்து உடனடியாக தனது கணவர் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் அகன்ஷாவின் பெற்றோர்கள் அவசர அவசரமாக அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது அங்கு அகன்ஷா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.மேலும் அங்கித்தின் குடும்பத்தார்கள் அகன்ஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அகன்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து அகன்ஷாவின்  பெற்றோர் கூறுகையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் கணவர் நாள்தோறும் திட்டி கேவலப்படுத்தி வந்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அகன்ஷாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement