"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
'நாங்க உங்க சொந்தக்காரங்க' குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளை.. மக்களே உஷார்.!
உறவினர்கள் என கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணிடம் நகைகளை திருடி சென்ற 2 பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, ஒசகெரேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சௌபாக்கியா (வயது 30). இவரது வீட்டிற்கு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஒரு பெண் வேலை கேட்டு வந்துள்ளார். ஆனால், 'சௌபாக்கியா வேலை எதுவும் இல்லை. இருந்தால் கூறுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சௌபாக்கியா நேற்று முன்தினம் வெளியே சென்றபோது அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய பெண்கள், நாங்கள் உங்கள் உறவினர்கள். உங்களது வீட்டில் தான் இருக்கிறோம் என கூறி, உடனடியாக வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சௌபாக்கியா வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டின் முன்பு நின்ற இரண்டு பெண்கள் சௌபாக்கியாவை நலம் விசாரித்து, குளிர்பானம் கொடுத்துள்ளனர்.
வெளியில் சென்று வந்ததால், உறவினர்கள் தானே என நினைத்து சௌபாக்கியமும் அதை குடிக்க, உடனே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த இரண்டு பெண்களும் வீட்டில் இருந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
அத்துடன் மயக்கம் தெளிந்து சௌபாக்கியா எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த நகைகளை காணாததால் உடனடியாக கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.