பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
இறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டியபோது உயிருடன் இருந்த மற்றொரு குழந்தை! பதறவைத்த சம்பவம்!
இறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டியபோது உயிருடன் இருந்த மற்றொரு குழந்தை! பதறவைத்த சம்பவம்!

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை புதைப்பதற்காக குழிதோண்டியபோது மண்பானையில் வைத்து உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஹித்தேஷ் என்பவரின் மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில் இவருக்கு கடந்த வாரம் புதன்கிழமை வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவருக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து சில நிமிடங்களில் இறந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையை அடக்கம் செய்வதற்காக வியாழக்கிழமை மாலை சுடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு குழிதோண்டி கொண்டு இருக்கும் போது மூன்றடியில் ஒரு பானை தென்பட்டுள்ளது. அந்தப் பானையினுள் 3 வயதுடைய ஒரு பெண் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியபடி இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகையில், குழந்தை உயிருடன் கொலை செய்யும் நோக்கில் புதைத்துள்ளனர். மேலும் குழந்தையை யார் புதைத்தார்கள், குழந்தையின் பெற்றோர்கள் யார் என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.