தமிழகம் இந்தியா Covid-19

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு!

Summary:

full lockdown in pudhuchery

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில்  கடந்த ஜூலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்தது. 

அதன்படி புதுவையில் நாள்தோறும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் கடந்த 14-ம் தேதி முதல் இரவு 7 மணியுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டது. இரவு 7 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் இரவு 7 மணிக்குமேல் மக்கள் நடமாட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

இதன்படி, இன்று முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே இரவு 7  மணிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு 7 மணி முதல் புதுச்சேரியில் ஊரடங்கு தொடங்கியது.செவ்வாய்க்கிழமையான இன்று காலை வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது. ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement