பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த நான்கு பேர்..! பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்..!

பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த நான்கு பேர்..! பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்..!


four-of-family-found-dead-inside-locked-house

ஒடிசா மாநிலம் ராஜ்கங்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத். 35 வயதாகவும் இவருக்கு 30 வயதில் கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 18 மாத ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் நான்கு பேரும் பூட்டிய வீட்டுக்குள் மர்மமாக இறந்து கிடந்தனர். பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Crime

மேலும், வீட்டில் பால் பாத்திரம் கீழே கிடந்ததால் பாலில் விஷம் கலந்து குடித்துவிட்டு நான்கு பேரும் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால், பிரேத பரிசோதனையில் உடலில் விஷம் ஏதும் இல்லை என்றும், நான்கு பேரும் மூச்சு திணறி இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நால்வரின் இறப்பும் மர்மமாக இருப்பதால், அவர்கள் எப்படி இறந்தார்கள்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.