மொத்தமாக தீயில் கருகிய குடும்பம்..! அம்பலமான பகீர் பின்னணி.! மூத்த மகன் செயலால் நடந்த கொடூரம்.!

மொத்தமாக தீயில் கருகிய குடும்பம்..! அம்பலமான பகீர் பின்னணி.! மூத்த மகன் செயலால் நடந்த கொடூரம்.!


four-of-family-found-dead-at-apartment

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரவாடாவில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டிற்குள், 50 வயதான பங்காரு நாயுடு, அவரது மனைவி 44 வயதான டாக்டர் நிர்மலா, இவர்களது மகன் 22 வயதான தீபக் மற்றும் 19 வயதான காஷ்யப் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இது தற்கொலை சம்பவம் என கருதிய போலீசார், பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், பங்காரு நாயுடுவின் மூத்த மகனான தீபக் தமது பெற்றோர் மற்றும் சகோதரரை கொன்று விட்டு, நெருப்பு வைத்திருக்கலாம் என சந்தேகித்தனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில், மன அழுத்தம் காரணமாக கடந்த பல நாட்களாக தீபக் தமது பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Murderபொறியியல் பட்டதாரியான தீபக் டெல்லியில் அரசுப் பணியில் சேர்வதற்காக தன்னை தயார் படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் மன அழுத்தத்தில் இருந்த தீபக், ஒருகட்டத்தில் தமது பெற்றோரையும் சகோதரரையும் கொன்று விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிவும் அவ்வாறே வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.