கொரோனாவை விட கொடூரம்! நீரில் தத்தளிக்கும் அசாம் மாநிலம்! 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

கொரோனாவை விட கொடூரம்! நீரில் தத்தளிக்கும் அசாம் மாநிலம்! 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின!


flood-in-asam

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக பிரமபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அசாம் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சுமார் 3000 கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன. வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 47 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் நீரில் மூழ்கியது. வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் தஞ்சம் அடைந்தன. மேலும் தேசிய பூங்காவில் உள்ள பல விலங்குகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இந்த கொரோனா சமயத்தில் மேலும் துயரத்தில் உள்ளனர் அசாம் மக்கள்.