ஒன்னும் தெரியலைனா ஏன் ஆர்டர் பண்றீங்க? - ஓடிபி சொல்ல நேரமானதால் முதியவரை வறுத்தெடுத்த ஊழியர்; வருத்தம் தெறித்த ப்ளிப்கார்ட்.!

ஒன்னும் தெரியலைனா ஏன் ஆர்டர் பண்றீங்க? - ஓடிபி சொல்ல நேரமானதால் முதியவரை வறுத்தெடுத்த ஊழியர்; வருத்தம் தெறித்த ப்ளிப்கார்ட்.!



flipkart-sorry-to-customer

 

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக இருப்பது ஃப்ளிப்கார்ட். நமது ஊர்களில் கிடைக்காத பல்வேறு பொருட்களையும் பிளிப்கார்ட் தளத்திலிருந்து நாம் ஆர்டர் செய்து எளிய முறையில் வாங்கிவிட முடியும். 

இதற்கான கட்டமைப்பை அந்நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஆர்டர் செய்த பொருளுக்கு வாடிக்கையாளர் ஒருவர் தனது தந்தையின் செல்போன் நம்பரை கொடுத்துவிட, டெலிவரி செய்யப்படும்போது ஓடிபி அவருக்கு சென்றுள்ளது. 

அது கிடைக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர், "ஒன்றும் தெரியவில்லை என்றால் எதற்காக இதெல்லாம் ஆர்டர் செய்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எக்ஸ் தள பக்கத்தில் தனது முறையீட்டை தெரிவிக்கவே, பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த விஷயம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.