விமானத்தில் இருக்கையின் அருகே பயணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்!! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

விமானத்தில் இருக்கையின் அருகே பயணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து டெல்லிக்கு பைஜஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்துள்ளது. அதில் ஹரிஹரன் சங்கரன் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அந்த விமானத்தில் அவரது இருக்கையின் அருகே உள்ள கண்ணாடி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் அது பிளாஸ்டிக் டேப்புகளால் ஒட்டப்பட்டுள்ளது.

 இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் மும்பையில் இருந்து டெல்லிக்கு பறக்கும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து செல்லோடேப் கொண்டு  ஒட்டப்பட்டுள்ளது. இது சிறந்த பாதுகாப்பானது கிடையாது யாரேனும் கவனித்தீர்களா?  என பதிவிட்டிருந்தார். 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். மேலும் மேலே செல்லும் போது காற்றின் அழுத்தத்தினால் இவ்வாறு கண்ணாடி உடைய நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் இவை சரி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 ஆனால் விமானத்தில் உடைந்ததாக கூறப்பட்ட ஜன்னலில் உட்புறம் தான் உடைந்து டேப்பால் ஒட்டப்பட்டிருக்கிறது. வெளிப்பகுதி உடையவில்லை என ஊடகத்தினர் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். 
 


Advertisement
TamilSpark Logo