ராகிங் கொடுமையால் மன உளைச்சல்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி!,. உருக்கமான கடிதம் சிக்கியது..!

ராகிங் கொடுமையால் மன உளைச்சல்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி!,. உருக்கமான கடிதம் சிக்கியது..!


first-year-college-student-hanged-herself-due-to-raggin

ராகிங் கொடுமையால் முதலாமாண்டு கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி (19). இவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புவனேஸ்வர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு தற்கொலை குறித்த கடிதத்தையும் காவல்துறயினர் மீட்டனர்.

அந்த கடிதத்தில், தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவிகள் 3 பேர் தன்னை ராகிங் செய்து, மனரீதியாக மிகவும் துன்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதன் காரணமாக, தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. மேலும் மூவரும் விடுதியில் தங்கி இருப்பவர்களா அல்லது டேயிஸ்காலர்களா என்பதும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்றும், மாணவி அப்படி எந்த புகாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

கட்டாக்கில் தங்கியுள்ள மாணவியின் தாயார் புவனேஸ்வரில் உள்ள காவல் நிலையத்தில், தற்கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி தனது மகளின் மரணத்திற்கு காரணமான மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.