மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலி ! பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலி ! பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!


fire-accident-in-hospital-8-people-died

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அதிகாலை மூன்று மணியளவில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. பிரதமர் மோடி இந்த விபத்து தொடர்பாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில்  உள்ள ஷ்ரே எனும் தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர  தீ விபத்தில் சிக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அந்த மருத்துவமணையில் சிகிச்சை பெற்ற  40 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.