இந்தியா

அதிகாலையில் பற்றி எரிந்த தீ! 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது!

Summary:

Fire accident in delhi

டெல்லியின் தென்பகுதியில் உள்ள துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் இன்று அதிகாலையில் தீப்பற்றியுள்ளது. 

அங்கு ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. அங்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 28 க்கும் மேற்பட்டதீயணைப்பு வண்டிகள் அங்கு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, அதிகாலை 3:40 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் தீயை அணைப்பதற்குள் சுமார் 1500 குடிசைகள் எரிந்து சாமபலாகின. மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.  


இதேபோல, கடந்த டிசம்பர் மாதமும் தெற்கு டெல்லிப் பகுதியில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு ஏற்பட்ட  தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, அங்கு தீ பற்றியது எப்படி? அல்லது தீயை யாரேனும் பற்றவைத்தார்களா? என்ற கோணத்தில் டெல்லி காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.


Advertisement