இந்தியா

திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 32 பேர் பலி!

Summary:

fire accident in delhi

டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி பகுதியில் பேக் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஆலைக்குள் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மளமளவென ஆலை முழுவதும் தீ பரவியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்றன. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

அதிகாலையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் இறந்துள்ளனர்.  50 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர், பலர் புகையால் பாதிப்படைந்து உள்ளதாக தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 


Advertisement