எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!!


Fire Accident in AIIMS Hospital Delhi

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று தீப்பிடித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததை, தொடர்ந்து ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பின்னர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதும் அணைத்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.