கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கொத்து கொத்தாக மடிந்த 15 பேர்.! சோக சம்பவம்.!

கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கொத்து கொத்தாக மடிந்த 15 பேர்.! சோக சம்பவம்.!


Fifteen workers killed after drinking counterfeit liquor

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்கரெட்டிகுடம் நகரில் கடந்த 2 நாட்களாக கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 25-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 15 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கள்ளச்சாராயத்தால் 15 குடும்பங்கள் நாசமாகியுள்ளது அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.