காதலனுடன் ஊர் சுற்றிய 16 வயது மகள்... சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி ஊர் சுற்றிய தந்தை... பதற வைக்கும் வீடியோ.!

காதலனுடன் ஊர் சுற்றிய 16 வயது மகள்... சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி ஊர் சுற்றிய தந்தை... பதற வைக்கும் வீடியோ.!


father-who-murdered-her-daughter-brutally-for-fell-in-l

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொடூர தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் உள்ள  முச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 16 வயது மகள் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை தனது காதலனுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

Indiaஇதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியின் காதலனை அடித்து துரத்தி விட்டு இரும்பு கம்பியை எடுத்து கொடூரமாக தாக்கி தனது மகளை கொலை செய்திருக்கிறார். அதன் பின்பும் ஆத்திரம் தீராத அவர் மகளின் இறந்த சடலத்தை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி அரை கிலோ மீட்டர் இழுத்துச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தனது மகளின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ததோடு  ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அவரது மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.