மறுத்த மனைவி..! 3 மகள்களை ஏரியில் தூக்கி வீசிக் கொன்ற கொடூர தந்தை...! நெஞ்சை உருக்கும் சம்பவம்.!



Father thrown three daughters into river

சூதாட்டம் விளையட மனைவி பணம் தராததால் தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் தந்தை ஏரியில் தூக்கி வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தாட்கோலி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பயாஸ். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் 4 பெண் குழந்தைகள் இருந்தனர். பயாஸ் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிகிறது. சூதாட்டத்திற்கு அடிமையான பயாஸ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டும் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

ஒருகட்டத்தில் மனைவி பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பயாஸ் தனது மூன்று மகள்களை ஏரிக்கு அழைத்து சென்று, அவர்கள் மூவரையும் ஏரியில் தூக்கி வீசியுள்ளார். இதில், பயாஸின் 10 வயது மகள், 9 வயது மகள் மற்றும் 7 வயதில் ஒரு மகள் என மூன்று மகள்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

பின்னர், ஊர் மக்கள் கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பயாஸை போலீசார் தேடி வருகின்றனர்.