இந்தியா

3 மாத குழந்தையை முதலில் தரையில் ஒரு அடி..! அப்புறம் ஜன்னல் வழியா சாலையில் வீசிய தந்தை..! மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடிய தாய்..! ஆனால்..?

Summary:

Father throw 3 months baby via window who cries while sleeping

உறங்கிக்கொண்டிருக்கும் போது குழந்தை அழுததால் மூன்று மாத பெண் குழந்தையை தந்தை ஜன்னல் வழியாக தூக்கி வெளியே வீசிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த 30 வயதான ஓசியோமா டெக்லன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியாவில் நொய்டாவில் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சலூன் மற்றும் பியூட்டி பார்லர்களில் இருந்து முடியை சேகரித்து விக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்று காசு சம்பாதித்து வந்த இவர் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவந்துள்ளார்.

வீட்டு வாடகைகூட குடுக்க வழியில்லாமல் இருந்தநிலையில் ஓசியோமா டெக்லன் கடந்த சில மாதங்களாகவே கடும் மனஅழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓசியோமா டெக்லன் தூங்கி கொண்டிருந்தபோது அவரது மூன்று மாத பெண் குழந்தை ஓயாமல் அழுதுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வந்து குழந்தையை காப்பாற்றுவதற்குள்  மீண்டும் குழந்தையை ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார் ஓசியோமா டெக்லன்.

கீழே ஓடிச்சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி. ஆனால் சிகிச்சைக்கு முன்னதாகவே குழந்தை இறந்துவிட்டது. இதனை அடுத்து அவரது மனைவி கொடுத்த புகாரை அடுத்து போலீசார் ஓசியோமா டெக்லனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement