பெற்ற மகன் மீது தீ வைத்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர்.! அதிர்ச்சி காரணம்.!



father-fired-on-son

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேந்திர குமார். 51 வயதான இவர், தனது தொழிலை நிர்வாகிக்கும் பொறுப்பை அவரது 25 வயதான மகன் அர்பித் சேட்டியாவிடம் வழங்கியிருந்தார். தொழிலுக்காக தனது மகனுக்கு அவர் கோடி கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் தனது மகனுக்கு வழங்கிய பணம் குறித்த கணக்குகளை தரும்படி பல முறை அர்பித் சேட்டியாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த பதிலையும் அளிக்காமல் இருந்துவந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை சுரேந்திர குமார், தனது மகன் அர்பித் சேட்டியா மீது கடந்த வாரம் ரசாயனத்தை ஊற்றி பின்னர் நெருப்பு வைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அர்பித் சேட்டி தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுரேந்திர குமார் தனது மகன் மீது தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியானதையடுத்து, சுரேந்திர குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.