இந்தியா

இறந்துபோன தனது 3 மாத மகனை கடைசியாக ஒரு தடவை பார்க்க வேண்டும்..! மஸ்கட்டில் இருந்து கண்ணீர் விடும் தந்தை.!

Summary:

Father cries from muscat to see his died 3 months son in india

கொரோனோவின் கோரத்தாண்டவத்தால் உலகின் எந்த பகுதியில் இருந்தும் இந்தியாவுக்கு வர தற்போது எந்த விமானங்களும் இயங்கவில்லை. இந்நிலையில், இறந்துபோன தனது 3 மாத மகனை பார்க்கவேண்டும் எனவும், தனக்கு உதவி செய்யும்படியும் மஸ்கட் நாட்டில் உள்ள இறந்த குழந்தையின் தந்தை வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

இந்தியாவில் உள்ள பிதாபுரம் என்ற இடத்தில் தனது மூன்று மாத மகன் இறந்துவிட்டதாகவும், தான் மஸ்கட் நாட்டில் இருப்பதாகவும், இந்தியாவுக்கு வர எந்த விமானமும் இயங்காத காரணத்தால், தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்க கூட தன்னால் முடியவில்லை, அவனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க பிரதமர் மோடி தனக்கு உதவி செய்ய வேண்டும் என அழுதுகொண்டே அந்த குழந்தையின் தந்தை டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ டிவிட்டரில் வைரலானதை அடுத்து, இந்த தந்தையின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Advertisement