கதறித்துடிக்கும் ரசிகர்கள்.. பிரபல பாடகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..! பிரதமர் மோடி இரங்கல்.!!

கதறித்துடிக்கும் ரசிகர்கள்.. பிரபல பாடகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்..! பிரதமர் மோடி இரங்கல்.!!


famous singer bhubinder singh death

பிரபல இந்தி பாடகர் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் பாடகர் பூபிந்தர் சிங் (வயது 82). இவர் பாலிவுட்டில் பலபாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் கொடிகட்டிப்பறந்தவர். கடந்த சில தினங்களாக இவர் உடல்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபிந்தர்சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார்.

பூபிந்தர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கியமானவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர் மேலும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.