24 வயது இளம் பெண்!! நிர்வாணமாக்கி தெருவில் போட்டு அடித்த கணவனின் குடும்பத்தினர்.. பதறவைக்கும் சம்பவம்..



Family attacked young girl for dowry issue near Odisha

போதிய வரதட்சணை கொடுக்காததால் இளம் பெண்ணை கணவர், மாமனார் ஆகியோர் நிர்வாணமாக்கி அடித்து கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது மாப்பிளை வீட்டார் பெண் வீட்டாரிடம் அதிக வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டாரோ தங்களால் முடிந்தவரை தங்கள் பெண்ணிற்கு நகைகள் போட்டு திருமணத்தை முடித்துவைத்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்து அதிக வரதட்சணை வேண்டும் என மாப்பிளை வீட்டார் பெண்ணிடம் கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதன் உச்சமாக சமபவத்தன்று அந்த இளம் பெண்ணை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று அந்த பெண்ணின் மாமனார் நாயக் மற்றும் அவரது இரு மகன்கள் முன்னா, நிரஞ்சன் ஆகியோர் கட்டைகளால் அடித்து தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.