இந்தியா

சிறப்பு பூஜை என கூறி இளம் பெண்ணை தனியே அழைத்து சென்ற சாமியார்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

Summary:

Fake samiyar in bengalore

பெங்களூரில் உள்ள பானஸ்வாடி என்னும் பகுதியை சேர்ந்தவர் கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரவேண்டும் என்றும், அதிர்ஷ்டம் பெருகவேண்டும் என்றும் குறிப்பிட்ட சாமியார் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

தான் சொல்லும் பூஜைகளை செய்தல் பிரச்சனை நீங்கி அதிர்ஷ்டம் பெருகும் என சாமியார் கூற, அவர் சொன்ன ஒவொன்றையும் தவறாமல் செய்துள்ளார் கீதா. இதன் முதல் கட்டமாக கீதாவின் வீட்டில் பூஜை செய்யவேண்டும் என சாமியார் கூற, அதை ஏற்றுக்கொண்ட கீதா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதனை அடுத்து இரண்டாவது பூஜையை இரவு நேரத்தில் காட்டில் தனியாக செய்யவேண்டும் என சாமியார் கூற, அதையும் நம்பி தனியே அவருடன் காட்டுக்குள் சென்றுள்ளார் கீதா. அங்கே சென்றதும் அந்த சாமியார் கீதாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

தனது ஆசைக்கு இறங்கவேண்டும் என்றும், அப்போதுதான் பூஜை பலிக்கும் எனவும் அந்த சாமியார் கீதாவை மிரட்டியுள்ளார். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து ஓடிவந்த கீதா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அந்த போலி சாமியாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement