இந்தியா

மகனை கடத்திவிட்டதாக பெற்றோருக்கு வந்த தகவல்..! தேடி சென்ற போலீசாருக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..!

Summary:

Fake phone call about kidnapping

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஸ்வயம் குமார் என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் தங்கள் மகனை யாரோ கடத்திவிட்டதாக கடந்த 24 ஆம் தேதி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரில், தங்கள் மகனை யாரோ கடத்திவிட்டதாகவும், பணம் குடுத்தால்தான் அவரை விடுவிப்போம் என பேஸ்புக் மூலம் தங்களை யாரோ மிரட்டுவதாக கூறியிருந்தனர். இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த நபரை, செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்மூலம் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அனைவர்க்கும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவனை யாரும் கடத்தவில்லை. தன்னை கடத்திவிட்டதாக அவரே நாடகமாடியிருப்பது தெரியவந்தது.

பள்ளிக்குச் செல்லாமல், ஊர் சுற்றி பொழுதைக் கழித்தது பெற்றோருக்குத் தெரிந்தால், அவர்கள் திட்டுவார்கள் என பயந்து இவ்வாறு செய்ததாகக் காவல் துறையிடம் கூறியுள்ளான் அந்த சிறுவன்.


Advertisement