இந்தியா

8 மணி நேரத்திற்க்கு மேலாக முடங்கிய சமூக வலைதளம்! அதிவேகத்தில் சிக்கலை சரி செய்த பேஸ்புக் நிறுவனம்!!

Summary:

8 மணி நேரத்திற்க்கு மேலாக முடங்கிய சமூக வலையதளம்! அதிவேகத்தில் சிக்கலை சரி செய்த பேஸ்புக் நிறுவனம்!!

சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சேவைகள் சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக அனைத்து நாடுகளிலும் திடீரென முடங்கியது. இதனால் சமூக வலைதள ஆர்வளர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

 

 

இதன் விளைவாக, சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும்,  இந்த சிக்கலை கூடிய விரைவில் சரிசெய்வோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே  சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கேட்டது.


இதனையடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை சீரமைக்கப்பட்டு இன்று அதிகாலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி செயல்பட தொடங்கியது.


Advertisement