பிக் பிரேக்கிங்: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சிவராஜ் திடீர் மரணம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

பிக் பிரேக்கிங்: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சிவராஜ் திடீர் மரணம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!


Ex minister sushma sivaraj passed away

முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் உடல்நல குறைவால் தனது 67 வயதில் காலமானார். கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவில் அவதிப்பட்டு வந்த சுஷ்மா சிவராஜ் இன்று உடல்நிலை மிக மோசமானதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுஷ்மா சிவராஜ் அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

sushma swaraj

இந்நிலையில் அவரது இந்த திடீர் மரணம் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா சிவராஜின் மறைவுக்கு பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.