என்னவொரு ஆக்ரோஷம்! வாலிபரை துரத்தி பந்தாடிய யானை.! பதறவைக்கும் பகீர் வீடியோ!!

என்னவொரு ஆக்ரோஷம்! வாலிபரை துரத்தி பந்தாடிய யானை.! பதறவைக்கும் பகீர் வீடியோ!!


Elephant attacked youngman video viral

அசாம் மாநிலத்தில் காட்டு யானை ஒன்று 30 வயது மதிப்புமிக்க வாலிபரை விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று  30 வயது மதிப்புமிக்க வாலிபரை துரத்தி சென்றுள்ளது. இந்நிலையில் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த வாலிபர் தலைதெறிக்க ஓடியுள்ளனர். 

ஆனால் அப்பொழுது அந்த வாலிபர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் அவரை நெருங்கிய அந்த யானை அந்த வாலிபரை ஆவேசமாக தனது தும்பிக்கையால் தூக்கி எறிந்துள்ளது. இதனைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் யானையை காட்டிற்குள் துரத்தியுள்ளனர்.

மேலும் பலத்த காயமடைந்த அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி மனதை பதற வைக்கிறது.