இந்தியா சினிமா

வாக்காளர் அட்டையில் இருந்த சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம்; உ.பி.யில் அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்

Summary:

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளில் பல தவறுகள் வருவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. 

ஆனால் இந்தமுறை உ.பி.யில் மிகவும் விசித்திரமான தவறுகள் நடந்துள்ளன. பொதுவாக ஒரே கிராமத்து மக்களின் புகைப்படம் மாறி மாறி வருவதை நாம் பார்த்துள்ளோம். இந்த சமயம் மிகவும் விசித்திரமாக மிருகங்களின் புகைப்படங்கள் பலரின் வாக்காளர் அட்டையில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இன்னும் ஆச்சர்யபட வைக்கும் விஷயம் என்னவெனில், பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில்  இடம்பெற்றுள்ளது தான்.

sunny leone in voters id க்கான பட முடிவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


Advertisement