இந்தியா லைப் ஸ்டைல் வீடியோ

பச்சை கலரில் இருக்கும் கோழியின் முட்டை கரு..! மஞ்சளுக்கு பதிலாக பச்சை..! கேரளாவில் நடக்கும் வினோதம்.! வைரல் வீடியோ.!

Summary:

Egg yolk in green color in Kerala video goes viral

கேரளாவை சேர்ந்த சில கோழிகள் போடும் முட்டையின் மஞ்சள் கருவானது வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்தில் உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாபுதீன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கோழி பண்ணையில் வளரும் ஒரு கோழியின் முட்டையை உடைத்து அதை வீடியோவாக வெளியிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் அந்த முட்டையின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்ததுதான்.

இதனை அடுத்து பலரும் அவருக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், ஒருநாள் கோழியின் முட்டை ஒன்றை சமைப்பதற்காக உடைத்தபோது மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்தது. அதனால் நாங்கள் அதனை சாப்பிடவில்லை.

பின்னர் அந்த கோழியின் முட்டைகளை அடைகாக்க வைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கோழி குஞ்சுகளும் தற்போது வளர்ந்து அவையும் பச்சை நிறத்திலையே முட்டையிடுவதாக கூறியுள்ளார். இந்த வினோத நிகழ்வை கேட்ட பலரும் ஆச்சரியமடைந்தனர்.

மேலும், ஷிஹாபுதீன் பண்ணையில் உள்ள கோழிகளையும், அதன் முட்டைகளையும் சம்மந்தப்பட்ட துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தும் அவர்களாலும் எதுவும் கண்டறியமுடியவில்லை. இதனை அடுத்து மருத்துவர்கள் முட்டைகளை தங்கள் ஆய்வகங்களுக்கு எடுத்து சென்று ஆய்வு நடத்திவருகின்றனர்.

இதனிடையே பச்சைநிற கருவுடன் உள்ள முட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement