கொரோனா பரவல் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் நிலை என்னவாகும்?

கொரோனா பரவல் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் நிலை என்னவாகும்?


dr randeep kuleria says corono will be in peak at june july

இந்தியாவில் ஜூன் - ஜூலை மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்க வாய்ப்புகள் உள்ளன என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தின் மாதிரியை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி பார்த்தால் இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் எனத் தெரிகிறது.

ஆனால் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடியாது. அந்த சமயத்தில் மட்டுமே கூற முடியும். அதுபோலவே கொரோனா தொற்றின் வீரியம் இதே அளவு இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதையும் இப்போதே கூற முடியாது’’ என கூறியுள்ளார்.

ஏற்கனவே தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்திலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்த பாதிப்பு 54 ஆயிரத்தையும் இறப்பு 1800 யும் கடந்துள்ளது.